சிவகங்கை கச்சநத்தம் மூவர் கொலை வழக்கு: 27 பேருக்கு ஆயுள் தண்டனை சிவகங்கை: கச்சநத்தத்தில், இரு தரப்பினர் மோதலில், மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள், 27 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தத்தில், 2018ல் கருப்பர் கோவிலில் சாமி கும்பிடும்போது முதல் மரியாதை வழங்குவதில், இரு தரப்பினருக்குள் பிரச்னை ஏற்பட்டது. இதில், மூன்று பேர் கொலை செய்யப்பட்டனர். ஆவரங்காடு, கச்சநத்தத்தை சேர்ந்த, 33 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். இந்த வழக்கில் சிவகங்கை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன், 27 பேரையும் குற்றவாளி என அறிவித்தார். 'வீடியோ கான்பரன்சிங்' முறையில், சிவகங்கை நீதிமன்றத்தில் இருந்தபடி, மதுரை, திருச்சி, மகளிர் சிறைகளில் இருந்த, 27 பேரிடம் நீதிபதி தீர்ப்பை விளக்கினார். குற்றவாளிகளுக்கான தண்டனை விபரம் இன்று (ஆக.,5) அறிவிக்கப்பட்டது. அதில், 27 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி முத்துக்குமரன் உத்தரவிட்டார். தண்டனை விபரங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் நீதிமன்ற வளாக...