தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு? முதல்வர் ஸ்டாலின் எடுக்கும் முடிவு!
தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு? முதல்வர் ஸ்டாலின் எடுக்கும் முடிவு! கொரோனா பரவல் அதிகரித்த நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தீவிர தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி முகாம்களை அதிகரித்தல் போன்ற முன்னெடுப்புகளை தமிழக அரசு மேற்கொண்டதன் மூலம் தமிழ்நாட்டில் விரைவாக கொரோனா கட்டுக்குள் வந்தது. மூன்று அலைகள் முடிவடைந்த நிலையில் நான்காவது அலைகுறித்த அதிர்ச்சி செய்திகள் வெளியாகி வருகின்றன. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் சீனாவில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. தென் கொரியாவிலும் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2019 இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா ஓரிரு மாதங்களில் உலகம் முழுவதும் பரவியது. எனவே மீண்டும் சீனாவில் பரவத் தொடங்கியிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தடுப்பூசிகள் அதிகளவில் செலுத்தப்பட்டிருந்தாலும் குறிப்பிட்ட இடைவெளிகளில் உருமாறி மருத்துவ வல்லுநர்களுக்கு சவாலாக உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை பாதிப்பு குறைந்து வந்தாலும் அண்டை நாட்டு நிலவரங்களைப் பார்க்கும் போது எந்நேரமும் நிலைமை மாறலாம் என்ற அச...