Latest IPL 2022 Points Table- ராஜஸ்தான் முதலிடம்; ஆரஞ்சு கேப், பர்ப்பிள் கேப் அப்டேட்ஸ்
Latest IPL 2022 Points Table- ராஜஸ்தான் முதலிடம்; ஆரஞ்சு கேப், பர்ப்பிள் கேப் அப்டேட்ஸ் மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணியை வீழ்த்தியது. முன்னதாக, மும்பையில் உள்ள பிரபோர்ன் ஸ்டேடியத்தில் டேபிள் டாப்பர்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி வீழ்த்தியது, இந்தப் போட்டிகளுக்குப் பிறகான பாயிண்ட்ஸ் டேபிள், ஆரஞ்சு கேப், பர்ப்பிள் கேப் விவரங்கள் இதோ: 15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 20 -வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின . இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த வெற்றியினால் ராஜஸ்தான் அணி 3 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. 2-வது இடத்தில் கொல்கத்தா அணியும் ,3-வது இடத்தில் குஜராத் ,4-வது இடத்தில் பெங்களூரு அணியும் உள்ளன. மும்பை இந்தியன்ஸ் 9வது இடத்திலும் சிஎஸ்கே 10வது இடத்திலும் உள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸின் ஜோஸ் பட்லர் 4 போட்டிகளில் 218 ரன்களுடன் ஆரஞ்சர் தொப்பியை...