Posts

Showing posts with the label #A | #Reg | #Hellip | #A

18 அடி உயர நித்யானந்தா சிலைக்கு கும்பாபிஷேகம்- பக்தர்கள் அதிர்ச்சி!585189691

Image
18 அடி உயர நித்யானந்தா சிலைக்கு கும்பாபிஷேகம்- பக்தர்கள் அதிர்ச்சி! வில்லியனூர் அருகே தமிழக பகுதியான பெரம்பையில் 18 அடி உயரத்தில் நித்யானந்தாவிற்கு சிலை அமைத்து கும்பாபிஷேகம் செய்யப்பட்ட காட்சி. சேதராப்பட்டு: புதுவை குருமாம்பேட் பாண்லே பால் பண்ணை அருகே உள்ள தமிழக பகுதியான பெரம்பை ஐஸ்வர்யா நகரில் நித்யானந்தாவின் சீடரான பாலசுப்பிரமணியம் என்பவர் மலேசிய முருகன் கோவில் போல் இங்கு கோவிலைக் கட்டி வந்தார். 27 அடியில் முருகன் சிலை பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டு இதற்கு பத்துமலை முருகன் கோவில் என பெயரிடப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்கிடையில் கோவில் உள்ளே நுழையும் பொழுது 18 அடி உயரத்தில் நித்யானந்தா உருவம் கொண்ட பிரம்மாண்ட சிலை உருவாக்கப்பட்டு பத்துமலை முருகன் மற்றும் நித்யானந்தா உருவம் கொண்ட சிலைக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த சிலையை பார்த்ததும் போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே நித்யானந்தா சிவன் போல் வேடம் அணிந்து கையில் சூலத்துடன் தோன்றிய காட்சியைப் போல் இந்த சிலை இருந்தது. இதுகுறித்து கோவில் கும்பாபிஷேகம் செய்த சிவாச்சாரியார்களிடம்