லயனுக்கும்... டைகருக்கும் பொறந்தவன் என் பையன்..! பைட்டராக மிரட்டும் விஜய் தேவரகொண்டாவின் \'லிகர்\' ட்ரைலர்!346777241
லயனுக்கும்... டைகருக்கும் பொறந்தவன் என் பையன்..! பைட்டராக மிரட்டும் விஜய் தேவரகொண்டாவின் \'லிகர்\' ட்ரைலர்! நடிகர் விஜய் தேவரகொண்டா குத்து சண்டை வீரராக நடித்துள்ள 'லிகர்' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி பார்ப்பவர்களை பிரமிக்க வைத்துள்ளது. பிரபல தெலுங்கு பட இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், நடிகர் விஜய் தேவரகொண்டா குத்துசண்டை வீரராக நடித்துள்ள திரைப்படம் 'லிகர்'. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் பூரி ஜெகன்நாத்தும் , நடிகை சார்மியும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் படமாக்கப்பட்டு உள்ளது. இதை தவிர தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் டப்பிங் செய்து வெளியிடப்பட உள்ளது. இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு வில்லனாக உலக புகழ்பெற்ற பாக்ஸர் மைக் டைசன் நடித்துள்ளார். நடிகை ரம்யா கிருஷ்ணன் விஜய் தேவரகொண்டாவுக்கு அம்மாவாக நடித்துள்ளார். பாகுபலி படத்திற்கு பின்னர் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பு அதிகம் பேசப்படு...