பட்ஜெட்டில் பெண்களுக்கு 1000 ரூ : அரசு சொல்வது என்ன?? திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ₹1,000 உரிமை தொகை வழங்கும் திட்டம் துவங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்த நிலையில் இதுவரை இது குறித்து தமிழக அரசு எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை, இந்த நிலையில் இது குறித்து வரும் 18ம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கும் தமிழக பட்ஜெட்டில் இது குறித்த அறிவிப்பு வெளியாகுமா, வரும் ஜூன்3ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளன்று அமல்படுத்தப்படுமா என்று எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது. பெண்களுக்கு உரிமை தொகை? திராவிட இயக்கம் துவங்கியதில் இருந்து பெண்கள் நலனுக்காக பல்வேறு புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டது, பெண்களின் உரிமைக்கான போராட்டம், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உள்ளிட்ட பல்வேறு புரட்சிகளுக்கு வித்திட்டது, இந்த முறை திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், உரிமை தொகை மாதம் ₹1,000 வழங்கப்படும் என புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் அமல்படுத்தி வரும் நிலையில், இல்லதரசிகளுக்கு மாதம் ₹1,000 உரிமை தொகை வழங்கும் ...