சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 2 கூடுதல் நீதிபதிகள் நியமனம்: ஜனாதிபதி ஆணை வெளியீடு
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ஒதுக்கபட்ட 75 நீதிபதிகள் பதவிகளில் 16 இடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்காக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களாக உள்ள 6 பேரை உச்ச நீதிமன்ற கொலிஜியம் கடந்த பிப்ரவரி 16ம் தேதி ஜனாதிபதிக்கு பரிந்துரைத்தது. அந்த பட்டியலில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களான என்.மாலா, சுந்தர் மோகன், கே. குமரேஷ் பாபு, எஸ்.சௌந்தர், அப்துல் ஹமீத், ஆர்.ஜான் சத்யன் ஆகியோர் அங்கம் வகித்தனர். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக வழக்கறிஞர்கள் என்.மாலா மற்றும் எஸ்.சவுந்தர் ஆகியோரை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இவர்களின் பதவிக்காலம் பதவியேற்றதில் இருந்து இரண்டாண்டுகள் ஆகும். என்.மாலா புதுச்சேரி அரசு பிளீடராக கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்....
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment