1000 ரூபாய் உதவித் தொகை எப்போது?- வெளியான அசத்தல் அப்டேட்!


1000 ரூபாய் உதவித் தொகை எப்போது?- வெளியான அசத்தல் அப்டேட்!


தமிழகத்தில் 6 ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று கலை அறிவியல், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்விகளில் பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு, தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி படிப்பை முடிக்கும் வரை மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்றுஅமைச்சர் பொன்முடிஅண்மையில் அறிவித்திருந்தார்.

பெண்கள் உயர் கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின்படி மூன்று லட்சம் மாணவிகள் பயன் பெறுவார்கள் எனவும், குறிப்பாக கலை அறிவியல் படிப்புகளில் பயிலும் ஒரு லட்சம் மாணவிகள் பலனடைவார்கள் என்றும் உயர்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

இந்த நிலையில், கல்லூரி மாணவிகள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தியுள்ள இந்த திட்டம் எப்போது அமல்படுத்தப்படும் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

திருவாரூரில் அண்ணாமலை கூட்டத்தை கூட்டியது எப்படி? பின்னணியில் இவர் தான்!
காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15 ஆம் தேதி இத்தி்ட்டம் அமலுக்கு வரவுள்ளதாகவும், மாணவிகளின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை நேரடியாக செலுத்தப்படும் என்றும் உயர்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கல்லூரி மாணவிகளை போன்று மாணவர்களும் 1000 ரூபாய் உதவித் தொகையை அரசு வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog