இன்று புதிய காற்றழுத்த தாழ்வு மையம்!! 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!


இன்று புதிய காற்றழுத்த தாழ்வு மையம்!! 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!


தமிழகத்தில் மார்ச் முதலே வெயில் கொளுத்தி வருகிறது. மே 4 நேற்று முன் தினம் முதல் கத்திரி வெயில் மக்களை சுட்டெரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதுமானது என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை அவசியமின்றி வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் இது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றையும்  சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.தெர்தேன்

அதன்படி  இன்று கன்னியாக்குமரி, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி தேனி, திண்டுக்கல், மதுரை, நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிதென்தேதிண்டும்நீதுல் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழை குறிப்பிட்ட படி பெய்தால் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் . அத்துடன்  தரைக்காற்று 40 முதல் 50 கிமீ வேகத்தில் வீச வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Comments

Popular posts from this blog