IPL 2022: மும்பை வெற்றியால் பிளே ஆப் வாய்ப்பை இழந்த டெல்லி அணி.. பெங்களூருக்கு அடித்த லக்


IPL 2022: மும்பை வெற்றியால் பிளே ஆப் வாய்ப்பை இழந்த டெல்லி அணி.. பெங்களூருக்கு அடித்த லக்


ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை தோற்கடித்தது.  இதையடுத்து பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை டெல்லி அணி இழந்தது. அதேவேளையில், 4 வது அணியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது.

நடப்பாண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மொத்தம் 70 போட்டிகளை கொண்ட மிக நீண்ட தொடராக களைகட்டியது.  குஜராத், ராஜஸ்தான், லக்னோ ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில், 4வது அணியாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி உள்ளே செல்லுமா அல்லது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி உள்ளே செல்லுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் டெல்லி அணி நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. டேவிட் வார்னர் 5 ரன்களில் டேனியல் சாம்ஸ் பந்துவீச்சில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மிட்சேல் மார்ஷ் முதல் பந்திலேயே போல்ட் ஆகி வெளியேறினார். 50 ரன்களுக்குள் 4 விக்கெட்டை இழந்தது.

பின்னர் கேப்டன் ரிஷப் பண்ட் நிதானமாக விளையாடி ரன் சேகரிப்பில் ஈடுபட்டார். இதனால் டெல்லி அணி ஓரளவு நல்ல ஸ்கோரை நோக்கி சென்றது. அணியின் ஸ்கோர் 125 ஆக இருந்தபோது பண்ட் ஆட்டமிழந்தார்.  ரோவ்மான் போவெல் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் 7 விக்கெட் இழப்பிற்கு அந்த அணி 1`59 ரன்களை எடுத்தது. மும்பை தரப்பில் பும்ரா 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

இதையும் படிங்க: கார்ல்சனை மீண்டும் வீழ்த்தினார் பிரக்ஞானந்தா..!


160 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.  ரோகித் சர்மா 2 ரன்களில் ஆட்டமிழந்தபோதும் இஷான் கிஷான்-பிரெவிஸ் இணை சிறப்பாக விளையாடியது.  அணியின் ஸ்கோர் 76 ஆக இருந்தபோது 48 ரன்கள் எடுத்திருந்த இஷான் கிஷான் ஆட்டமிழந்தார். மும்பை வீரர் டிம் டேவிட்  11 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்ஸர் அடித்து 38 ரன்களை எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். டிம் டேவிட் களமிறங்கிய முதல் பந்தில் பேட்டில் பந்து உசரி கீப்பர் ரிஷப் பண்ட் கேட்ச் பிடித்தார். இதற்கு நடுவர் ஆவுட் கொடுக்காத நிலையில், டெல்லி அணியும் ரிவ்யூ கேட்கவில்லை. இது அந்த அணிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

இறுதியில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்து மும்பை அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை டெல்லி அணி இழந்தது. அதேவேளையில் 16 புள்ளிகளுடன் இருந்த பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி அடுத்து சுற்றுக்கு தகுதி பெற்றது.

Comments

Popular posts from this blog