விமானத்தில் வரம்பு மீறி நடந்து கொண்ட ஊழியர்.. நேரடியாக புகார் அளித்த பூஜா ஹெக்டே!252418954


விமானத்தில் வரம்பு மீறி நடந்து கொண்ட ஊழியர்.. நேரடியாக புகார் அளித்த பூஜா ஹெக்டே!


இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் விஜய்யுடன் இணைந்து பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. பீஸ்ட் திரைப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெறவில்லை என்றாலும். வசூல் ரீதியாக படம் இழப்பை ஏற்படுத்தவில்லை. பீஸ்ட் திரைப்படத்திற் பிறகு தமிழில் படவாய்ப்பு வரும் என்று நினைத்த பூஜாவுக்கு எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

இருப்பினும், பூஜா ஹெக்டே கைவசம் தெலுங்கு மற்றும் இந்தி என சில படங்களை வைத்துள்ளார். இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகவுள்ள ஜன கன மன. விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா ரிலீஸாக இப்படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், பூஜா ஹெக்டே தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். அதில், தான் மும்பையிலிருந்து புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் பயணித்ததாகவும், அப்போது அதிலிருந்த விமான ஊழியர் விபுல் நாகேஷ் என்பவர், தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், அவரது திமிர் பிடித்த மற்றும் அச்சுறுத்தும் செயல்பாட்டால் தான் மிகவும் பாதிக்கப்பட்டதாக பதிவிட்டுள்ளார் பூஜா ஹெக்டே.

தான் வழக்கமாக இது போன்ற பதிவுகளை வெளியிடுவதில்லை என்றும், ஆனால், அந்த ஊழியர் தன்னிடம் வெளிப்படுத்திய விதம் மிகவும் மோசமாக இருந்ததால் வேறுவழியின்றி இதை பதிவு செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த பதிவை இண்டிகோ விமானத்தின் ட்விட்டர் பக்கத்தையும் டாக் செய்து பூஜா ஹெக்டே பதிவிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

50 Fabulous Autumnal Buys for Under pound 50

Asian Turkey Lettuce Wraps Recipe