விமானத்தில் வரம்பு மீறி நடந்து கொண்ட ஊழியர்.. நேரடியாக புகார் அளித்த பூஜா ஹெக்டே! இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் விஜய்யுடன் இணைந்து பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. பீஸ்ட் திரைப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெறவில்லை என்றாலும். வசூல் ரீதியாக படம் இழப்பை ஏற்படுத்தவில்லை. பீஸ்ட் திரைப்படத்திற் பிறகு தமிழில் படவாய்ப்பு வரும் என்று நினைத்த பூஜாவுக்கு எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும், பூஜா ஹெக்டே கைவசம் தெலுங்கு மற்றும் இந்தி என சில படங்களை வைத்துள்ளார். இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகவுள்ள ஜன கன மன. விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா ரிலீஸாக இப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், பூஜா ஹெக்டே தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். அதில், தான் மும்பையிலிருந்து புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் பயணித்ததாகவும், அப்போது அதிலிருந்த விமான ஊழியர் விபுல் நாகேஷ் என்பவர், தன்னிடம் தகாத...